காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீ யாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிடா தருவேனே நான்
அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே
கலைந்து போனேனே
பறித்து போனாயே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவன்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனாயே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனசா
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே